/உள்ளூர் செய்திகள்/கரூர்/இனாம்கரூருக்கு கேட்டதும் கிடைத்தது குடிதண்ணீர்இனாம்கரூருக்கு கேட்டதும் கிடைத்தது குடிதண்ணீர்
இனாம்கரூருக்கு கேட்டதும் கிடைத்தது குடிதண்ணீர்
இனாம்கரூருக்கு கேட்டதும் கிடைத்தது குடிதண்ணீர்
இனாம்கரூருக்கு கேட்டதும் கிடைத்தது குடிதண்ணீர்
ADDED : ஆக 07, 2011 01:54 AM
கரூர்: இனாம்கரூர் நகராட்சி மக்களின் தீராத குடிநீர் பிரச்னைக்கு, போக்குவரத்து அமைச்சரின் முயற்சியலாஞூ தற்காலிக தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இனாம்கரூர் நகராட்சி பகுதி மக்கள் குடிநீர் பிரச்னை தீர்க்கக்கோரி, போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிடம் கோரிக்கை வைத்தனர். உடனடியாக, குடிநீருக்காக எம்.எல்.ஏ., நிதியில் இருந்து ஏழரை லட்ச ரூபாயை வழங்கினார். மூன்று லட்ச ரூபாய் மதிப்பில், அமராவதி ஆற்றில் இருந்து குழாய்கள் அமைக்கப்பட்டன. குழாய்கள் அமைக்கும் பணி முடிவடைந்து, திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி, குடிநீர் விநியோகத்தினை நேற்று துவங்கி வைத்தார். 'இதன்மூலம், முதற்கட்டமாக 30 ஆயிரம் மக்களுக்கு குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும். மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடையும்' என்று தெரிவித்தார். கலெக்டர் ÷ஷாபனா, கரூர் தொகுதிச் செயலாளர் திரு.வி.க., நகரச் செயலாளர்கள் செல்வராஜ், நெடுஞ்செழியன், இனாம்கரூர் நகராட்சி செயல் அலுவலர் பாக்கியலெட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.