/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பி.எஸ்.என்.எல்., ஊழியர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்பி.எஸ்.என்.எல்., ஊழியர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2011 11:37 PM
கடலூர் : தேசிய தொலை தொடர்பு ஊழியர் சம்மேளனம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பி.எஸ்.என்.எல்., விரிவாக்கத்திற்கு தேவையான பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும், தயாநிதிமாறனுக்கு கொடுக்கப்பட்ட 232 (ஐ.எஸ்.டி.என்) இணைப்புகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும். பதிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கு தொழிற்சங்க வசதிகள், ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். வி.ஆர்.எஸ். மற்றும் சி.ஆர்.எஸ்., திட்டங்களை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தொலை தொடர்பு ஊழியர் சம்மேளனம் கடலூர் மாவட்ட சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜி.எம்.ஒ., கிளைத் தலைவர் சந்திசேகர் , செல்வராஜ், வெளிப்பகுதி தலைவர் பழனிசாமி, உட்பகுதி தலைவர் பிச்சைபிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி துவக்கி வைத்தார். அகில இந்திய செயலாளர் ஜெயராமன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் அன்பழகன், மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட பொருளாளர் மஞ்சினி, வேலாயுதம், மாவட்ட துணைத் தலைவர் விஜயலட்சுமி, கிளைச் செயலாளர் வினாயக மூர்த்தி நன்றி கூறினார்.


