பார்லி சுமுகமாக நடக்க உதவுங்கள்அத்வானியிடம் பிரணாப் வேண்டுகோள்
பார்லி சுமுகமாக நடக்க உதவுங்கள்அத்வானியிடம் பிரணாப் வேண்டுகோள்
பார்லி சுமுகமாக நடக்க உதவுங்கள்அத்வானியிடம் பிரணாப் வேண்டுகோள்
ADDED : ஜூலை 31, 2011 10:54 PM

புதுடில்லி:பார்லிமென்ட் கூட்டத் தொடரை, சுமுகமாக நடத்த ஒத்துழைப்புத்
தரும்படி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியைச் சந்தித்து, நிதி அமைச்சர்
பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்
தொடர், இன்று துவங்குகிறது. இதில், பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, மத்திய
அரசுக்கு நெருக்கடி கொடுக்க, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதையடுத்து,
பார்லிமென்ட் கூட்டத் தொடரை, சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைக்கும்படி
கேட்டுக் கொள்வதற்காக, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பா.ஜ., மூத்த
தலைவர் அத்வானியை, அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். அப்போது, லோக்சபா
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜும் உடன் இருந்தார்.இதுகுறித்து,
மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில்,'எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்தப்
பிரச்னை குறித்தும், சபையில் விவாதிப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.
எனவே, அமளி, வெளிநடப்பு போன்ற பிரச்னைகளில் ஈடுபடாமல், சபை அமைதியாக நடக்க,
ஒத்துழைப்புத் தர வேண்டும் என, அத்வானியிடம், பிரணாப் வலியுறுத்தினார்'
என்றன. ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி, பெங்களூரில்
முகாமிட்டிருந்ததால், நேற்றைய சந்திப்பில் அவர் பங்கேற்கவில்லை.
பார்லிமென்டை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க, நேற்று அனைத்துக்
கட்சிக் கூட்டத்தை சபாநாயகர் மீராகுமார் நடத்தினார். அதைத் தொடர்ந்து,
அத்வானியை பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.