/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உப்பளத்தில் ராஜிவ்காந்தி பிறந்த நாள்உப்பளத்தில் ராஜிவ்காந்தி பிறந்த நாள்
உப்பளத்தில் ராஜிவ்காந்தி பிறந்த நாள்
உப்பளத்தில் ராஜிவ்காந்தி பிறந்த நாள்
உப்பளத்தில் ராஜிவ்காந்தி பிறந்த நாள்
ADDED : ஆக 22, 2011 10:50 PM
புதுச்சேரி : புதுச்சேரி மாநில இளைஞர் மற்றும் உப்பளம் தொகுதி இளைஞர் காங்., சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மாநில இளைஞர் காங்., பொதுச் செயலாளர் இளையராஜா, லட்சுமணன் தலைமை தாங்கினர். காங்., தலைவர் சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நீல கங்காதரன், ஜெயமூர்த்தி ஆகியோர், மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். உருளையன்பேட்டை காங்., தலைவர் ரகுமான், கதிர்காமம் காங்., தலைவர் ஆறுமுகம், சேகர், முனுசாமி, மாநில செயலாளர் கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.