/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.132 கோடி கடன் வழங்க முடிவுகூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.132 கோடி கடன் வழங்க முடிவு
கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.132 கோடி கடன் வழங்க முடிவு
கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.132 கோடி கடன் வழங்க முடிவு
கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.132 கோடி கடன் வழங்க முடிவு
ADDED : ஆக 28, 2011 10:12 PM
திண்டுக்கல் : ''கூட்டுறவு வங்கி மூலம் மாவட்டத்தில் பல்வேறு வகையான கடன்கள் வழங்க, 132 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என கூட்டுறவு இணை பதிவாளர் வில்வசேகரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 135 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதில் 51 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கொப்பறை தேங்காய் உலர்த்தும் களம் சூரிய ஒளியின் மூலம் அமைத்துதரப்படவுள்ளது. பயிர் கடன் வட்டியில்லாமல் கொடுக்கப்படுகிறது. நகைக்கடன் வட்டியுடன் வழங்கப்படுகிறது. கறவை மாடுகள் வழங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும், என்றார்.வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆக., ல் 65 மி.மீ., மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 71 மி.மீ., மழை பெய்துள்ளது. நெல், மக்காச்சோளம், கடலை, பாசிபயிர் ஆகிய விதைகள் இருப்பு உள்ளது. இவற்றை விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிலக்கோட்டை பகுதியில்,நெல்லில் மேலுரம் இட்டு, ஒரு ஏக்கருக்கு 600 மூடைகள் வரை உற்பத்தி செய்துள்ளனர். மழையை பயன்படுத்தி விவசாயிகள் உற்பத்தியை துவக்க வேண்டும், என்றார்.