/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கால்வாய் சீரமைப்பு பணிகள் விழுப்புரம் நகரில் துவக்கம்கால்வாய் சீரமைப்பு பணிகள் விழுப்புரம் நகரில் துவக்கம்
கால்வாய் சீரமைப்பு பணிகள் விழுப்புரம் நகரில் துவக்கம்
கால்வாய் சீரமைப்பு பணிகள் விழுப்புரம் நகரில் துவக்கம்
கால்வாய் சீரமைப்பு பணிகள் விழுப்புரம் நகரில் துவக்கம்
ADDED : ஜூலை 26, 2011 11:54 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் தூர்ந்துபோன கால்வாய் சீரமைக்கும் பணி நேற்று நடந்தது.
மழைக்காலத்திற்கு முன் கோலியனூரான் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். விழுப்புரம் பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக பகுதியில் தேங்கும் மழை நீர், கழிவு நீர் வெளியேறும் வகையில் கான்கிரீட் கால்வாய் அமைத்து கோலி யனூரான் வாய்க்காலில் இணைக்கப்பட்டிருந்தது. இந்த கால்வாய் பயன்படுத்தப்படாமலேயே தூர்ந்துபோனாது. இதன் மேல் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் வாய்க்கால் காலப்போக்கில் காணாமல் போனது. கடந்த சில நாட்களுக்கு முன் புதிய பஸ் நிலைய மழை நீரை வெளியேற்ற ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மணிமேகலை, கோலியனூரான் வாய்க்காலை சீரமைக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. தற்போது புதிய பஸ் நிலையத்திலிருந்து தூர்ந்துபோய் கிடந்த வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் மூலம் அகற்றப்படுகிறது. அதன் பின் நேற்று நகராட்சி துப்புரவு ஊழியர்கள் கால்வாய் அடைப்புகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பணிகள் குறித்து நகராட்சி பொறியாளர் பார்த்திபன் கூறுகையில், மழைக்காலத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்கள் தூர் வாரப்படுகிறது. திருச்சி நெடுஞ்சாலையோர அடைபட்ட கால்வாய் தூர்வாரப்பட்டு மழைநீர் கோலியனூரான் வாய்க்கால் மூலம் வெளியேற்ற முயற்சித்துள்ளோம். இதே போல் கலெக்டர் வளாகம் பின் பகுதியிலிருந்து துவங்கி கோலியனூரான் வாய்க்கால் கழிவு அடைப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து அடைபட்டுள்ள இடங்களில் சீர் செய்து மழை நீர், கழிவு நீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.