/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வெளிமாநிலங்களுக்கு நூல் அனுப்பும் ஓ.இ., மில்கள்வெளிமாநிலங்களுக்கு நூல் அனுப்பும் ஓ.இ., மில்கள்
வெளிமாநிலங்களுக்கு நூல் அனுப்பும் ஓ.இ., மில்கள்
வெளிமாநிலங்களுக்கு நூல் அனுப்பும் ஓ.இ., மில்கள்
வெளிமாநிலங்களுக்கு நூல் அனுப்பும் ஓ.இ., மில்கள்
ADDED : செப் 16, 2011 01:34 AM
திருப்பூர்:திருப்பூர், சோமனூர், பல்லடம் விசைத்தறியாளர்'ஸ்டிரைக்'
தொடர்வதால், வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள ஓ.இ., மில்கள், உற்பத்தி செய்த
நூலை விற்க முடியாமல் உள்ளன.
பல கோடி ரூபாய்க்கு வர்த்தக பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. அதை சரிக்கட்டும் வகையில், தேக்கமடைந்துள்ள 20ம் நம்பர்
நூல்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றன.ஓ.இ., மில் அசோசியேஷன்
நிர்வாகிகள் கூறியதாவது:விசைத்தறி 'ஸ்டிரைக்' நீடிப்பதால், ஓ.இ., மில்களில்
உற்பத்தி செய்த நூலை விற்பனை செய்ய முடியவில்லை. வர்த்தக பாதிப்புக்கு
இடையே, வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டியுள்ளதால்,
பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது.மில்களில் தேக்கமடைந்துள்ள நூலை,
மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியபிரதேஷத்துக்கு அனுப்பி வருகிறோம்.
விசைத்தறிகள் 'ஸ்டிரைக்' முடியும்போது, மீண் டும் உள்ளூர் வர்த்தகத்தை
துவக்குவோம், என்றனர்.


