ADDED : ஆக 29, 2011 10:24 PM
மதுரை : மதுரை மகபூப்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி.
இவரது மனைவி இறந்தததால், 15 வயது மகளை சம்மட்டிபுரத்தில் உள்ள மீனாட்சி என்பவரின் பராமரிப்பில் விட்டார். மீனாட்சியின் தங்கை மகன் நெருக்கமாக இருந்ததால், மகள் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசில் பார்த்தசாரதி புகார் செய்தார். இதுதொடர்பாக, மீனாட்சி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.