Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/பல்சமயப் பேரவை பொதுக்கூட்டம்

பல்சமயப் பேரவை பொதுக்கூட்டம்

பல்சமயப் பேரவை பொதுக்கூட்டம்

பல்சமயப் பேரவை பொதுக்கூட்டம்

ADDED : ஆக 01, 2011 04:06 AM


Google News
சேலம்: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவதரித்து, 175 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, சேலம் ஏ.வி.ஆர்.கல்யாண மண்டபத்தில், பல்சமயப் பேரவை பொதுக்கூட்டம் நடந்தது.

மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கமலாத்மானந்தஜி மகராஜ் தலைமை வகித்தார். பல்வேறு சமயத் தலைவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.புத்த சமயம் சார்பில், டாக்டர் பிக்கு போதிபாலா, கிறிஸ்தவ சமயம் சார்பில், சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன், இஸ்லாமிய சமயம் சார்பில், சர்வ சமய மக்கள் ஒருமைப்பாடு இயக்கத்தைச் சேர்ந்த இஸ்மாயில், இந்து சமயம் சார்பில் நெல்லையப்பன், சமண சமயம் சார்பில், மகன்லால்ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு பற்றி, கூட்டத்தில் பேசப்பட்டது. பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us