ADDED : ஆக 29, 2011 01:01 AM
ஈரோடு: விபத்துக்களை தடுக்கும் நோக்கில் ஈரோடு மாவட்டம் முழுவதும் வாகன
சோதனையை போலீஸார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில்
பெருந்துறை ரோடு, சத்தி ரோடு, கரூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி சாலை
விபத்து நடக்கிறது. விபத்துகளை தடுக்கும் நோக்கத்தில் வாகன சோதனையை
போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஈரோடு மாநகரில் பிரப் ரோடு, காந்திஜி
ரோடு, மேட்டூர் ரோடு, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், சூரம்பட்டி
நால்ரோடு உள்ளிட்ட இடங்களில் வரும் டூவீலர், கார், பஸ்கள் மற்றும் கனரக
வாகனங்களை போக்குவரத்து போலீஸார் கண்காணிக்கின்றனர். அதிவேகமாகவும்,
குடிபோதையிலும், லைசென்ஸ், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களின்றியும், வாகனம்
ஓட்டுவோருக்கு அபராதம் விதிக்கின்றனர். பெருந்துறையில் நடந்த சோதனையில்
அதிவேகமாக இயக்கிய 25க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டது.