ரத்த அழுத்தத்தை குறைக்கும் உருளைகிழங்கு
ரத்த அழுத்தத்தை குறைக்கும் உருளைகிழங்கு
ரத்த அழுத்தத்தை குறைக்கும் உருளைகிழங்கு
ADDED : செப் 01, 2011 12:50 PM
லண்டன் : பொதுவாக உருளைகிழங்கு, கொழுப்பு சத்து அதிகம் உள்ள பொருளாக கருதப்படுகிறது.
ஆனால் உருளைகிழங்கு, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இது உடலின் எடையை அதிகரிப்பதில்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெல்சல்வேனியா பல்கலைக்கழகத்தில் 18 பேரிடம் நாள் ஒன்றிற்கு 6 முதல் 8 உருளைகிழங்கு வீதம் சாப்பிட சொல்லி ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு மாதத்திற்கு பின்னர் அவர்களை சோதனை செய்ததில், ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 18 பேரின் ரத்த அழுத்தம் 3.5 சதவீதம் வரை குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அவர்களின் எடையும் அதிகரிக்கவில்லை. உருளைகிழங்கில் கலோரிகள் மிகக் குறைந்த அளவே உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.