/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/குண்டும், குழியுமான பஞ்சப்பள்ளி அணை ரோடுகுண்டும், குழியுமான பஞ்சப்பள்ளி அணை ரோடு
குண்டும், குழியுமான பஞ்சப்பள்ளி அணை ரோடு
குண்டும், குழியுமான பஞ்சப்பள்ளி அணை ரோடு
குண்டும், குழியுமான பஞ்சப்பள்ளி அணை ரோடு
ADDED : ஆக 29, 2011 11:43 PM
தர்மபுரி : மாரண்டஹள்ளியை அடுத்த பஞ்சப்பள்ளி அணை சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வானக ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பாலக்கோட்டில் இருந்து பஞ்சப்பள்ளி வழியாக கர்நாடகா மாநிலம் மைசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக அளவில் வாகன போக்குவரத்து உள்ளது. மைசூர் பகுதியில் இருந்து ஒகேனக்கல் சுற்றலா வரும் வாகனங்கள் பெரும் அளவில் இந்த வழியாக வந்து செல்கிறது.
கடந்த காலங்களில் மேசமாக இருந்த சாலை வசதிகள் தற்போது சீர் செய்யப்பட்டு போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சப்பள்ளி பஸ் ஸ்டாப்பில் இருந்து பஞ்சப்பள்ளி அணை வரையான சாலை, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த சாலை 3 கி.மீ., தூரத்துக்குள் உள்ளது. இந்த சாலையில் பல இடங்கள் குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறியுள்ளது. இந்த 3 கி.மீ., சாலையும் மேட்டுப்பாகுதியில் இருப்பதால், வாகனங்கள் செல்ல பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறது. இந்த சாலையை சீர் செய்ய பொதுப்பணித்துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.