சாம்பியன் லீக் : நியூ சவுத் வேல்ஸ் வெற்றி
சாம்பியன் லீக் : நியூ சவுத் வேல்ஸ் வெற்றி
சாம்பியன் லீக் : நியூ சவுத் வேல்ஸ் வெற்றி
UPDATED : அக் 04, 2011 11:06 PM
ADDED : அக் 04, 2011 08:18 PM
சென்னை : சாம்பியன் லீக் டி20 கிரிக்கெட் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், நியூ சவுத் வேல்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற நியூசவுத் வேல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து, 202 ரன்கள் என்ற இலக்கை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு நிர்ணயித்தது. 202 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணி 18.5 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்தது, இதனால் நியூசவுத் வேல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


