இரு தினங்களில் 288 பேர் மனுதாக்கல்
இரு தினங்களில் 288 பேர் மனுதாக்கல்
இரு தினங்களில் 288 பேர் மனுதாக்கல்
ADDED : செப் 23, 2011 10:03 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட
நேற்று 271 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.உள்ளாட்சி தேர்தலுக்கான
வேட்பு மனு, கடந்த இரண்டு நாட்களாக பெறப்படுகிறது.
மாநகராட்சி கவுன்சிலர்
பதவிக்கு ஒருவரும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 4 பேரும், பேரூ ராட்சி
கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும்,ஊராட்சி தலைவர் பதவிக்கு 16 பேரும், ஊராட்சி
ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 3 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு
246 பேரும் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.கடந்த இரண்டு நாட்களில்
மாவட்ட அளவில் மொத்தம் 288 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.