எடியூரப்பா மகன்கள், மருமகன் வீடுகளில்லோக் ஆயுக்தா போலீசார் திடீர் சோதனை
எடியூரப்பா மகன்கள், மருமகன் வீடுகளில்லோக் ஆயுக்தா போலீசார் திடீர் சோதனை
எடியூரப்பா மகன்கள், மருமகன் வீடுகளில்லோக் ஆயுக்தா போலீசார் திடீர் சோதனை
ADDED : செப் 20, 2011 11:39 PM

பெங்களூரு:முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன்கள், மருமகன் வீடுகள், அலுவலகங்களில் ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
சட்டத்துக்கு விரோதமாக பெற்ற சொத்துகள் குறித்த விவரங்களை பரிசீலித்தனர்.எடியூரப்பா, அவரது மகன், மகள், மருமகன் உட்பட, 15 பேர் மீதான வழக்கு, லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில், லோக் ஆயுக்தா போலீசார், திடீரென எடியூரப்பா மருமகன் சோஹன் குமாரின் விஜயநகர் வீடு, சேஷாத்திரிபுரம் அலுவலகம், மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா ஆகியோரின், குமாரபார்க்கில் உள்ள சஹயாத்ரி ஹெல்த் கேர், தவளகிரி பிராப்பர்ட்டீஸ் ஆகிய அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. எடியூரப்பா, மகன்களின் வியாபாரத்தில் பங்குதாரர்களாக உள்ள, சிக்பேட்டை தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., ஹேமசந்திர சாகரின் அலுவலகத்திலும் சோதனை நடந்ததுசோஹன் குமாரின் விஜயநகர் வீட்டில் லோக் ஆயுக்தா உதவி எஸ்.பி., மஞ்சுநாத் தலைமையிலும், ராகவேந்திரா, விஜயேந்திரா, சோஹன் குமார் ஆகியோரின் அலுவலகங்களில் லோக் ஆயுக்தா உதவி எஸ்.பி., கிரிஷ் தலைமையில் சோதனை நடத்தினர். வீடுகள், அலுவலகங்களில் கிடைத்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், 'என் வீட்டிலும் சோதனை செய்யட்டும். அப்போது தான் மக்களுக்கு உண்மை தெரியும்' என்றார்.