/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வேளாளர் இன்ஜி., கல்லூரி தொழில்நுட்ப கண்காட்சிவேளாளர் இன்ஜி., கல்லூரி தொழில்நுட்ப கண்காட்சி
வேளாளர் இன்ஜி., கல்லூரி தொழில்நுட்ப கண்காட்சி
வேளாளர் இன்ஜி., கல்லூரி தொழில்நுட்ப கண்காட்சி
வேளாளர் இன்ஜி., கல்லூரி தொழில்நுட்ப கண்காட்சி
ADDED : செப் 27, 2011 12:26 AM
ஈரோடு: ஈரோடு வேளாளர் இன்ஜினியரிங் கல்லூரியில் புதிய இன்ஜினியரிங் கண்டுபிடிப்புகளுக்கான தொழில்நுட்ப கண்காட்சி நடந்தது.
கல்லூரி செயலாளர் சந்திரசேகர் துவக்கி வைத்தார். 192 கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மருத்துவ பொறியியல், கணிப்பொறியியல், மின் அணுவியல், மின்னியல், தகவல் தொழில்நுட்பம், நிர்வாக மேலாண்மை, கணினி பயன்பாட்டியல் ஆகிய துறைகளை சார்ந்த கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருந்தன. துறை வாரியாக சிறப்பு கண்டுபிடிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 'வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி' கல்லூரி, 'வில்க்ரோ' அமைப்பு சார்பில் பரிசு வழங்கப்பட்டது. கண்காட்சியை 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.