கால்நடை பாதுகாப்பு மருத்துவ முகாம்
கால்நடை பாதுகாப்பு மருத்துவ முகாம்
கால்நடை பாதுகாப்பு மருத்துவ முகாம்
ADDED : செப் 18, 2011 10:28 PM
விழுப்புரம்:விக்கிரவாண்டி ஒன்றியம் மதுரப்பாக்கம் ஊராட் சியில் உள்ள எம்.
குச்சிபாளையம் கிராமத்தில் இலவச கால்நடை பாதுகாப்பு முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் பாரதி முகாமை துவக்கி வைத் தார். ராதாபுரம் இளநிலை கால்நடை
உதவி மருத்துவர் ஆல்பர்ட் ஆரோக்கியராஜ் வரவேற்றார். டி.புதுப்பாளையம்
இளநிலை கால்நடை உதவி மருத்துவர் ரகுநாத் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தார்.
தடுப்பூசி பணியாளர்கள் பிரபு, வேல்முருகன் உள்ளிட்ட குழுவினர் 403
கால்நடைகளுக்கு தடுப்பு ஊசி, குடற்புழு நீக்கம் செய்தனர். கால்நடை
வளர்ப்போர் பிரதிநிதி ஜெயக்குமார், அய்யாக்கண்ணு கலந்து கொண்டனர்.