/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தீவிரம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு உறுதிஅரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தீவிரம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு உறுதி
அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தீவிரம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு உறுதி
அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தீவிரம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு உறுதி
அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தீவிரம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு உறுதி
ADDED : செப் 11, 2011 12:43 AM
திருநெல்வேலி : அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தொடர்பாக போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அரசு கேபிள் டிவி ஒளிபரப்பை தீவிரப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறைந்த விலையில் அதிக சானல்களை பொதுமக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதுசம்பந்தமாக நெல்லையில் கேபிள் டிவி ஆபரேட்டர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் கேபிள் டிவியில் மொத்தம் 98 சானல்களில் 56 கட்டண சானல்கள் உட்பட அனைத்து சானல்களும் அரசு கேபிள் டிவியில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கேபிள் டிவி ஒளிபரப்புக்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மாவட்டம் வாரியாக இத்தொழிலுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து தொழிலாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும். அரசு கேபிள் டிவி ஒளிபரப்புக்கு மாநகராட்சி பகுதிகளுக்கு தேவையான சுமார் 110 கி.மீ தூரத்திலான ஆப்டிக்கல் பைபர் சிஸ்டம், கிளேசிங் இயந்திரம், போதுமான தொழில் நுட்ப பணியாளர்கள் வசதியும் செய்து தரப்படும். அரசு கேபிள் தொடர்பாக பொதுமக்களிடையே தவறான தகவல்களை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டம் வாரியாக அரசு கேபிளுக்கு தேவையான உதவிகளையும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் மேற்கொண்டால் குறைந்த கட்டணத்தில் அதிக சானல்களை மக்களுக்கு வழங்கும் வகையில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்புக்கு உறுதுணையாக இருப்போம் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்தனர். இதில் அரசு கேபிள் டிவி ஒருங்கிணைப்பு அலுவலர் ராஜன், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.