/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒன்பதாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குழப்பம்ஒன்பதாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குழப்பம்
ஒன்பதாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குழப்பம்
ஒன்பதாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குழப்பம்
ஒன்பதாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குழப்பம்
ADDED : செப் 28, 2011 12:59 AM
மதுரை : சமச்சீர் கல்வி முறை அமலான பின் முதன்முறையாக காலாண்டு தேர்வு
நடந்து வருகிறது.
இத்தேர்வுக்கு மாவட்ட அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள்கள்
தயார் செய்யப்படும். மதுரை மாவட்டத்தில் நேற்று ஆங்கிலம் 2ம் தாள் தேர்வு
நடந்தது. வினாத்தாள் வழங்கியதும் மாணவர்கள் குழம்பினர். காரணம் அதில் 80
மதிப்பெண்களுக்கே வினாக்கள் இடம் பெற்றிருந்தன.6 முதல் 8ம் வகுப்பு
வரையும், 11, 12ம் வகுப்புக்கும் ஆரல், ஓரல் என்னும் வாசித்தல், கேட்டல்
திறனுக்காக 20 மதிப்பெண் தனியாக உண்டு. எனவே அவர்களுக்கு 80
மதிப்பெண்ணுக்கே வினாக்கள் இருக்கும். ஆனால் 9, 10ம் வகுப்புக்கு ஆரல்,
ஓரல் கிடையாது. மேலும் 10ம் வகுப்புக்கு 100 மதிப்பெண்ணுக்கு கேள்விகள்
இருந்தன. ஒன்பதாம் வகுப்புக்கு மட்டும் ஏன், 80 மதிப்பெண்கள் என பல
ஆசிரியர்களுக்கு விடை தெரியவில்லை. இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்களில்
விசாரித்தபோது, ''ஒன்பதாம் வகுப்புக்கு மாதிரி வினாத்தாள் வரத் தாமதம்
ஆகிவிட்டது. எனவே 'ஒர்க்புக்' ஒன்றில் இருந்த மாதிரியை அடிப்படையாக வைத்து
வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. தற்போது வாசிப்பு பழக்கத்திற்கு
முக்கியத்துவம் தருவதால், 20 மதிப்பெண்களை 'ஆரல், ஓரலுக்காக' வழங்கலாம் என
கருதியதால் 80 மதிப்பெண்ணுக்கு வினாக்கள் இருந்தன. தாமதமாக வந்த மாதிரி
வினாத்தாளை அரையாண்டு தேர்வில் சரிசெய்வோம்,'' என்றனர்.