/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வலு, பளு தூக்கும் போட்டி; செல்வம் கல்லூரி சாதனைவலு, பளு தூக்கும் போட்டி; செல்வம் கல்லூரி சாதனை
வலு, பளு தூக்கும் போட்டி; செல்வம் கல்லூரி சாதனை
வலு, பளு தூக்கும் போட்டி; செல்வம் கல்லூரி சாதனை
வலு, பளு தூக்கும் போட்டி; செல்வம் கல்லூரி சாதனை
ADDED : செப் 22, 2011 02:32 AM
நாமக்கல்: பல்கலை அளவிலான வலு மற்றும் பளு தூக்கும் போட்டியில், நாமக்கல்
செல்வம் கலை அறிவியல் கல்லூரி, இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தது.
பெரியார் பல்கலை கல்லூரிகளுக்கு இடையேயான வலு மற்றும் பளு தூக்கும் போட்டி,
ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. போட்டியில்
நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள, 10
கல்லூரிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.
அதில், நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரி மாணவியர் பங்கேற்று ஒட்டு
மொத்த போட்டிகளில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற
மாணவியரை கல்வி நிறுவன தாளாளர் செல்வராஜ், செயலாளர் கவித்ரா நந்தினி,
முதல்வர் அருள்சாமி, துணை முதல்வர்கள் ராஜவேல், கவிதா, உடற்கல்வியியல்
கல்லூரி துறைத்தலைவர் நந்தகுமார், ஆசிரியர்கள் சாதிக்அலிகான், கார்த்திக்
ஆகியோர் பாராட்டினர்.