Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்

பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்

பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்

பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்

ADDED : செப் 19, 2011 11:55 PM


Google News

தென்காசி : 'பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிட வேண்டும்' என மள்ளர் நாடு வலியுறுத்தியுள்ளது.



இதுபற்றி மள்ளர் நாடு நிறுவன தலைவர் சுப அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 54வது நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனாரின் வெண்கல சிலை மள்ளர் நாடு சார்பில் திறக்கப்பட்டது. பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.



துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலையும், காயமடைந்தோருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் நிவாரண நிதியாக வழங்கிட வேண்டும். மத்திய அரசு இதுபற்றி விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்'' என சுப அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us