அரசு கேபிள் "டிவி' க்கு கட்டுப்பாட்டு அறைகள்
அரசு கேபிள் "டிவி' க்கு கட்டுப்பாட்டு அறைகள்
அரசு கேபிள் "டிவி' க்கு கட்டுப்பாட்டு அறைகள்
ADDED : ஜூலை 24, 2011 06:33 AM
திண்டுக்கல்:''அனைத்து மாவட்டங்களிலும் அரசு கேபிள்'டிவி'கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது, விரைவில் அரசு கேபிள் 'டிவி' செயல்பட துவங்கும்,'' என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்பரேஷன் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அரசு கேபிள் 'டிவி'கட்டுப்பாட்டு அறை அமையும் இடத்தை பார்வையிட்ட அவர் கூறியதாவது: அரசு கேபிள் 'டிவி'அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் முதல் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்து விட்டேன். கட்டுப்பாட்டு அறை அமையும் இடங்கள் தயாராகி வருகிறது. விரைவில் அரசு கேபிள் 'டிவி' செயல்பட துவங்கும். இதில் இணைய ஆபரேட்டர்களும் ஆர்வமுடன் உள்ளனர், என்றார்.