/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்காலில் தங்குதடையின்றி நடந்து வரும் சுரண்டல் லாட்டரி விற்பனைகாரைக்காலில் தங்குதடையின்றி நடந்து வரும் சுரண்டல் லாட்டரி விற்பனை
காரைக்காலில் தங்குதடையின்றி நடந்து வரும் சுரண்டல் லாட்டரி விற்பனை
காரைக்காலில் தங்குதடையின்றி நடந்து வரும் சுரண்டல் லாட்டரி விற்பனை
காரைக்காலில் தங்குதடையின்றி நடந்து வரும் சுரண்டல் லாட்டரி விற்பனை
ADDED : ஆக 24, 2011 12:05 AM
காரைக்கால் : காரைக்கால் நகரப்பகுதியில் சுரண்டல் லாட்டரி விற்பனை ஜரூராக
நடந்து வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை தடை
செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்கால் நகர பகுதி மற்றும்
கோட்டுச்சேரியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.இங்கு
புதிய பஸ் நிறுத்தம், பழைய பஸ் நிறுத்தம், மாதாக்கோவில் வீதி, பெருமாள்
கோவில் வீதி சந்திப்பு, பாரதியார் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும்,
கோட்டுச்சேரி கடை வீதிகளிலும் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடக்கிறது. இங்கு,
ரோஸ், டைமண்ட், தங்கம் என்ற பெயர்களில் சிக்கிம் உள்ளிட்ட வெளிமாநில
லாட்டரி சீட்டுகள் விற்பனை நடக்கிறது. ஒவ்வொரு சீட்டும் 50, 70, 100 ரூபாய்
என விற்கப்படுகிறது. சில கடைகளில் போலியை தவிர்க்க ரசீதும் வழங்கப்படுவது
குறிப்பிடத்தக்கது.இவற்றின் முடிவுகள் பேக்ஸ் மற்றும் மெயில் மூலம்
வருகிறது. இதுமட்டுமின்றி உடனடி முடிவு தெரிவிக்கும் சுரண்டல் லாட்டரி
விற்பனை அமோகமாக நடக்கிறது. விக்கி என பெயர் கொண்ட சுரண்டல் லாட்டரி 6
ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆரம்பத்தில் 100, 200 பரிசு வழங்கும் இந்த
லாட்டரி, போக போக நம் பணத்தை காலி செய்துவிடுகிறது. இதில் பல
ஏமாந்துள்ளனர். குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள், கூலித்தொழிலாளிகள் இவற்றை
அதிகம் வாங்கி ஏமாந்து வருகின்றனர். காரைக்கால் நகரப் பகுதியில் லாட்டரி
சீட்டுகளை முற்றிலுமாக ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.