கைப்பையில் சிகரெட் லைட்டர் இருந்ததால்துபாய் செல்ல இன்ஜினியருக்கு அனுமதி மறுப்பு
கைப்பையில் சிகரெட் லைட்டர் இருந்ததால்துபாய் செல்ல இன்ஜினியருக்கு அனுமதி மறுப்பு
கைப்பையில் சிகரெட் லைட்டர் இருந்ததால்துபாய் செல்ல இன்ஜினியருக்கு அனுமதி மறுப்பு

திருவனந்தபுரம்:துபாய் செல்ல இருந்த இன்ஜினியரின் கைப்பையில் சிகரெட் லைட்டர் இருந்ததால், அவர் விமானத்தில் ஏற மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அனுமதி மறுத்து விட்டனர்.
நேற்று முன்தினம் மாலை விமான நிலையத்திற்குச் சென்றார்.அங்கு அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பரிசோதித்தனர். அப்போது அவரது கைப்பையில் சிகரெட் லைட்டர் இருந்தது. இதைக் கைப்பற்றிய போலீசார் அவர் விமானத்தில் செல்ல அனுமதி மறுத்து விட்டனர். இதுகுறித்து சங்கரநாராயணன் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார்.அவரது புகாரை ஏற்க மறுத்த அதிகாரிகள், வீட்டுக்குச் செல்லும்படி அறிவுறுத்தினர். தன்னை விமானத்தில் ஏற்ற மறுத்து விட்ட சம்பவம் குறித்து, அவர் சிவில் ஏவியேஷன் துறை அதிகாரிகளிடமும், ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன அதிகாரிகளிடமும் புகார் செய்தார்.
இதையடுத்து சோதனை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில், பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அதில், புகார்தாரர் தவறேதும் செய்யவில்லை என்பதும், அவரது விமான பயணத்தை போலீசார் ரத்து செய்தது தவறு என்றும் தெரியவந்தது. பொதுவாக, அதிகளவு மது மயக்கத்தில் வரும் பயணிகள், அதிகளவு தொற்றுநோய் கொண்ட நோயாளிகளைத்தான் பயணத்தில் இருந்து ஆப் லோடு செய்ய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த தவறும் செய்யாத ஒரு பயணியை ஆப் லோடு செய்தது பிரச்னையை கிளப்பி உள்ளது.இச்சம்பவம் குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.