கள்ளக்குறிச்சி : பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.கீழ்குப்பம் அடுத்த
ஈசாந்தை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகள் ஜெயலட்சுமி,18.
இவரை
பெற்றோர்கள் சின்னசேலத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு சேர
வற்புறுத்தினர். இதற்கு மறுத்த ஜெயலட்சுமி வீட்டில் தகராறு செய்துவிட்டு,
அதே ஊரில் உள்ள தாத்தா அய்யாகண்ணு வீட்டிற்கு சென்றுவிட்டார்.கடந்த 26ம்
தேதி அய்யகண்ணு பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியதால் மனமுடைந்த
ஜெயலட்சுமி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். முண்டியம்பாக்கம் அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம்
சிகிச்சை பலனின்றி இறந்தார்.கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.