Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சிறு, குறு விவசாயிகள் விபரம் சேகரிப்பு: உதவி இயக்குனர்

சிறு, குறு விவசாயிகள் விபரம் சேகரிப்பு: உதவி இயக்குனர்

சிறு, குறு விவசாயிகள் விபரம் சேகரிப்பு: உதவி இயக்குனர்

சிறு, குறு விவசாயிகள் விபரம் சேகரிப்பு: உதவி இயக்குனர்

ADDED : செப் 20, 2011 01:03 AM


Google News

நாமக்கல் : 'நாமக்கல் வட்டாரத்தில், சிறு, குறு விவசாயிகளின் விபரம் சேகரிப்புப் பணி, வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது' என, நாமக்கல் வேளாண் உதவி இயக்குனர் செல்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வட்டாரத்தில், சிறு, குறு விவசாயிகளின் விபரம் சேகரிப்பு பணி, வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண் துறை மூலம் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில், தற்போது சிறு, குறு வவசாயிகள் விவரம் சேகரிக்கபப்டடு, இணையதளத்தில் பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிது.



எனவே, இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், உடனடியாக அவரவர் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை அணுகி, உரிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே பதிவு செய்யாத விவசாயிகள், மண் ஆய்வுக்கு மண் மாதிரி சேகரம் செய்து அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நாமக்கல் வட்டாரத்தில் உள்ள அனைத்து சிறு, குறு விவாயிகளின் மண் வள விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மற்றும் இதுவரை பதிவு செய்யாத சிறு, குறு விவசயிகள் அனைவரும், தங்கள் வயலில் மண் மாதிரி சேகரம் செய்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். இதுகுறித்து மேலும் விபரம் அறிய வேண்டுமெனில், 04286-233698 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us