என்னை வழிநடத்திய பகவத் கீதை: துளசி கப்பார்ட் நெகிழ்ச்சி
என்னை வழிநடத்திய பகவத் கீதை: துளசி கப்பார்ட் நெகிழ்ச்சி
என்னை வழிநடத்திய பகவத் கீதை: துளசி கப்பார்ட் நெகிழ்ச்சி

புதுடில்லி: 'மோசமான காலங்களில் பகவான் கிருஷ்ணரின் கீதை போதனைகள் தன்னை வழிநடத்தியது' என்று அமெரிக்க தேசிய நுண்ணறிவுப்பிரிவு இயக்குனர் துளசி கப்பார்ட் கூறினார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள துளசி கப்பார்ட், அஜித் தோவல் தலைமையில் நடந்த சர்வதேச உளவு அமைப்பு தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்திய அதிகாரிகளுடன் சைபர் பாதுகாப்பு, உளவுத்துறை ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.
அதன் பிறகு டில்லியில் துளசி கப்பார்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பகவத் கீதையில் உள்ள போதனைகள், சவாலான காலங்களில் எனக்கு பலத்தையும் வழிகாட்டுதலையும் அளித்தது. உலகின் போர் மண்டலங்களில் பணியாற்றினாலும் சரி, இப்போது நாம் எதிர்கொள்ளும் சவால்களாக இருந்தாலும் சரி, பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கற்பித்த போதனைகள் பேருதவியாக இருக்கின்றன.
இவ்வாறு துளசி கப்பார்ட் கூறினார்.
கங்கை தீர்த்தம் அன்பளிப்பு!
அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க தேசிய நுண்ணறிவுப்பிரிவு இயக்குனர் துளசி கப்பார்டு, இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். அவருக்கு பிரதமர் மோடி, மகா கும்பமேளாவில் சேகரித்த கங்கை தீர்த்தத்தை அன்பளிப்பாக வழங்கினார்.