/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பனியன் தொழிலை பாதுகாக்க அரசுக்கு "சைமா' கடிதம்பனியன் தொழிலை பாதுகாக்க அரசுக்கு "சைமா' கடிதம்
பனியன் தொழிலை பாதுகாக்க அரசுக்கு "சைமா' கடிதம்
பனியன் தொழிலை பாதுகாக்க அரசுக்கு "சைமா' கடிதம்
பனியன் தொழிலை பாதுகாக்க அரசுக்கு "சைமா' கடிதம்
திருப்பூர் : பனியன் தொழில் முனைவோர் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை பாதுகாக்க, தமிழக முதல்வர் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சைமா சங்கம் வலியுறுத்தி உள்ளது.தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க(சைமா) தலைவர் ஈஸ்வரன், முதல்வருக்கு அனுப்பிய கடிதம்: இந்தியாவின் முன்னோடியாக திகழ்ந்த ஜவுளித்தொழில், இன்று மிகவும் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு, முதலில் மாசுபடுத்தாத சலவை ஆலைகள் இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். சாய கழிவுநீரை ஆற்றிலோ, நிலத்திலோ விடாமல், ஆவியாக்குவதற்கு அதிகப்படியான கட்டுப்பாடுகள் இல்லாமல் சுத்திகரிக்கப்பட வேண்டும்; மெஷின் மூலமாகவோ, இயற்கையாகவோ ஆவியாக்கி, எவ்வித இடையூறு இல்லாமல் தொழிலை நடத்த ஆவன செய்ய வேண்டும். பின்னலாடை தொழிலை நம்பியுள்ள பத்து லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை, தடுக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, பனியன் தொழில் முனைவோரை யும், பனியன் தொழிலாளர்களையும் காப் பாற்ற வேண்டும், என தெரிவித்துள்ளார்.