ஜூலை 21ல் பார்லிமென்ட் அனைத்து கட்சி கூட்டம்: மம்தா புறக்கணிப்பு
ஜூலை 21ல் பார்லிமென்ட் அனைத்து கட்சி கூட்டம்: மம்தா புறக்கணிப்பு
ஜூலை 21ல் பார்லிமென்ட் அனைத்து கட்சி கூட்டம்: மம்தா புறக்கணிப்பு
ADDED : ஜூலை 16, 2024 04:23 PM

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் வரும் ஜூலை 21ம் தேதி நடைபெற உள்ளது. கூட்டத்தை மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ம் தேதி முதல் ஆக.12ம் தேதி வரை நடைபெறும் என கடந்த ஜூலை 6ம் தேதி அறிவிப்பு வெளியானது. 2024- 25ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக ஜூலை 21ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
புறக்கணிப்பு
திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், ஜூலை 21ம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுவதால், அக்கட்சியின் பிரதிநிதிகள் யாரும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.