ADDED : ஆக 01, 2011 01:29 AM
திருக்கோவிலூர் : மின்வெட்டை கண்டித்து திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.திருக்கோவிலூர், ஜி.அரியூர், மணலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் தொடர் மின் வெட்டை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்டுமான சங்க வட்ட செயலாளர் ராஜவேல், மா.கம்யூ., மணலூர்பேட்டை நகர செயலாளர் செல்வம் தலைமை தாங்கினர்.விவசாய சங்க மாவட்ட தலைவர் தாண்டவராயன். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன். செயலாளர் செந்தில், விவசாய சங்க வட்ட தலைவர் பழனி, செயலாளர் ராமக்கிருஷ்ணன், பொருளாளர் ஏழுமலை மற்றும் பலர் பேசினர். வட்ட தலைவர் துளசி நன்றி கூறினார்.