/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மாஜி மந்திரி நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைமாஜி மந்திரி நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
மாஜி மந்திரி நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
மாஜி மந்திரி நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
மாஜி மந்திரி நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
UPDATED : செப் 16, 2011 09:10 AM
ADDED : செப் 16, 2011 08:10 AM
திருச்சி: திருச்சி தில்லை நகரில் உள்ள மாஜி தி.மு.க., அமைச்சர் நேருவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை சோதனை நடத்தி வருகின்றனர்.
நேருவின் தம்பி ராமஜெயம் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடக்கிறது. கோவையில் உள்ள நேரு தம்பியின் வீடு,அலுவலகத்திலும் நேருவின் சொந்த ஊரான லால்குடி அருகே உள்ள கானககிளியனூரில் உள்ள வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. மேலும் நேரு தம்பியான ராமஜெயம் மனைவியின் சகோதரி வசித்து வரும் திருச்சி பெரியார்நகரில் உள்ள வீடு மற்றும் நேருவுக்கு சொந்தமான சென்னையில் உள்ள நான்கு இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 12 இடங்களில் சோதனை நடைபெற்றது. திருச்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையில் போலீசார் சோதனை நடத்திவருகின்றனர்.