ADDED : ஆக 15, 2011 06:32 AM
புதுடில்லி: ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்துப் பேசினார்.முப்பது நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பின் போது, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக, பார்லிமென்டின் நடப்பு மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த விடாமல் எதிர்க்கட்சியினர் அமளி செய்து வருவது குறித்து, இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.
இது தவிர, தேசிய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்தும் ஆலோசித்ததாக, ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறினார்.