/உள்ளூர் செய்திகள்/தேனி/கோம்பையில் ஆக்கிரமிப்பு: பேரூராட்சி நடவடிக்கை தாமதம்கோம்பையில் ஆக்கிரமிப்பு: பேரூராட்சி நடவடிக்கை தாமதம்
கோம்பையில் ஆக்கிரமிப்பு: பேரூராட்சி நடவடிக்கை தாமதம்
கோம்பையில் ஆக்கிரமிப்பு: பேரூராட்சி நடவடிக்கை தாமதம்
கோம்பையில் ஆக்கிரமிப்பு: பேரூராட்சி நடவடிக்கை தாமதம்
ADDED : ஜூலை 13, 2011 02:43 AM
தேவாரம் : கோம்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கிராமச்சாவடி, ராஜாஜி
வீதி, பழைய போலீஸ் ஸ்டேஷன் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
கூட்டுறவு சொசைட்டிக்கு அருகில் ரோட்டை ஆக்கிரமித்து வரிசையாக ஆட்டிறச்சி,
கறிக்கோழி கடைகள் உள்ளன.
கழிவுகளை ரோட்டில் வீசுவதால் அவற்றை திண்பதற்காக
நாய்கள் சுற்றி திரிகின்றன. ஆட்டோ ஒர்க்ஷாப்காரர்கள் பழுதான வாகனங்களை
ரோட்டில் நிறுத்தி வைக்கின்றனர். கிராமச்சாவடி மற்றும் கன்னிகா பரமேஸ்வரி
கோயில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பெட்டி கடைக்காரர்கள் இருபுறமும் ரோட்டை
பலஅடி வரை ஆக்கிரமித்து ஸ்டால் அமைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள்
நடமாடுவதற்கும், வாகன ஓட்டிகள் தாராளமாக செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.


