/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கால்வாய் சீரமைக்காததால் சாலையில் செல்லும் கழிவுநீர்கால்வாய் சீரமைக்காததால் சாலையில் செல்லும் கழிவுநீர்
கால்வாய் சீரமைக்காததால் சாலையில் செல்லும் கழிவுநீர்
கால்வாய் சீரமைக்காததால் சாலையில் செல்லும் கழிவுநீர்
கால்வாய் சீரமைக்காததால் சாலையில் செல்லும் கழிவுநீர்
திருத்தணி : நகராட்சியில், கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படாததால், கழிவுநீருடன் மழைநீர், சாலையில் செல்கிறது.
மற்றவர்கள் எலக்ட்ரீசியன், ஆழ்துளை குழாய்களை சரி பார்ப்பது ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திருத்தணி நகரம் நாளுக்கு நாள் வளர்த்து வருவதாலும், தினமும் மக்களின் வருகை அதிகரித்து வருவதாலும் குப்பை அதிகளவில் சேருகிறது. ஊழியர்கள் பற்றாக்குறையால், தினசரி சேறும் குப்பையையும் அகற்ற முடியாமல் தவிக்கின்றனர். நகராட்சியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களையும் சீர்படுத்த முடிவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது: ''கழிவுநீர் கால்வாய்களை தினமும் சீரமைப்பதற்கு போதிய ஆட்கள் பற்றாக்குறையால் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் நகராட்சியில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைப்பதற்கு நகராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் போட்டும், டெண்டர் விடப்பட்டு தற்போது சீரமைக்கும் பணி, துரித வேகத்தில் நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் நகராட்சியில் உள்ள பெரும்பாலான கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படும். இனிவரும் காலங்களில் சாலையில் கழிவுநீருடன் மழைநீர் செல்வது முழுமையாக தடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.