ADDED : செப் 17, 2011 02:58 AM
கன்னியாகுமரி : நோய்களை கண்டுபிடிப்பதில் கதரியக்க நிபுணர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர் என்று கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் மோகன்ராஜ் பேசினார்.10வது நுண்கதிர் பணியாளர் தேசிய இயக்கத்தின் தேசிய மாநாடு கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளையில் துவங்கியது.
மாநாட்டிற்கு அகில இந்திய நுண்கதிர் பணியாளளர் சங்க தலைவர் டாக்டர் மோகன் பக்வத் தலைமை வகித்தார். நாகர்கோவில் டாக்டர் ஜெசேகரன் ஆஸ்பத்திரி டாக்டர் தேவபிரசாத் ஜெயசேகரன், டாக்டர் ரேணுபிரசாத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.மாநாட்டை துவக்கி வைத்து கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் மோக்னராஜ் பேசியதாவது:இன்றைய மருத்துவ உலகில் நோய்களை கண்டுபிடிப்பதில் சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் போன்ற நவீன கருவிகள் பயன்பாடு முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இதனால் இத்துறையில் பணியாற்றும் நிபுணர்கள் பணியாளர்கள் போன்றவர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்த துறையில் தெளிவான ஸ்கேன் படங்கள் தான் நோயை கண்டு பிடிப்பதிலும் புற்றுநோய் போன்ற வியாதிகளின் தாக்கத்தை அறியவும் பயன்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.டாக்டர் ஜெயசேகரன் ஆஸ்பத்திரி நுண்கதிரியக்க துறை பேராசிரியர் ரஞ்சித்சிங் நன்றி கூறினார். மூன்று நாட்கள் நடக்கும் மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்தும் 400க்கு மேற்பட்ட டாக்டர்கள், நிபுணர்கள் மாணவர்கள், பணியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.