ADDED : ஆக 14, 2011 10:26 PM
திருப்பூர் : திருப்பூர் பலவஞ்சிபாளையம் வேலவன் மெட்ரிக் பள்ளியில் மாணவ தலைவர் மற்றும் விளையாட்டுத்துறை தலைவர் தேர்தல் நடந்தது.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் ஓட்டளித்தனர். மாணவர் தலைவராக குப்புசாமி; துணைத்தலைவராக மாணவி கிருத்திகா; விளையாட்டு துறை தலைவராக தினேஷ்குமார்; துணை தலைவராக அன்புச்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளி முதல்வர் அரவிந்த், நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.