/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் மர்மமான முறையில் தீப்பிடிக்கும் குப்பை கன்டெய்னர்கள்நெல்லையில் மர்மமான முறையில் தீப்பிடிக்கும் குப்பை கன்டெய்னர்கள்
நெல்லையில் மர்மமான முறையில் தீப்பிடிக்கும் குப்பை கன்டெய்னர்கள்
நெல்லையில் மர்மமான முறையில் தீப்பிடிக்கும் குப்பை கன்டெய்னர்கள்
நெல்லையில் மர்மமான முறையில் தீப்பிடிக்கும் குப்பை கன்டெய்னர்கள்
ADDED : ஆக 13, 2011 01:33 AM
திருநெல்வேலி : நெல்லையில் குப்பை கன்டெய்னர்கள் மர்மமான முறையில்
தீப்பிடிக்கிறது.
நெல்லையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில்
குப்பைகளை சேகரிக்க கன்டெய்னர்கள் வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் குப்பை
கன்டெய்னர்கள் உடைந்து துரு பிடித்து சீரற்ற நிலையில் உள்ளன. உடைந்த
கன்டெய்னர்களில் கொட்டப்படும் குப்பைகள் ரோட்டில் சிதறி சுகாதாரக்கேடு
ஏற்படுகிறது. சில இடங்களில் கன்டெய்னர்களில் உள்ள குப்பைகள் தீயிட்டு
எரிக்கப்படுகிறது. கன்டெய்னர் குப்பைகளை அள்ளி செல்ல மாநகராட்சி நடவடிக்கை
மேற்கொண்டு வரும் நிலையில் குப்பைகளை தீயிட்டு எரிப்பது யார் என
தெரியவில்லை. வண்ணார்பேட்டை அரசுப்போக்குவரத்துக்கழக அலுவலக ரோட்டில்
கோயில் அருகே உள்ள குப்பை கன்டெய்னருக்கு நேற்று யாரோ தீ வைத்தனர்.
குப்பைகள் தீப்பிடித்து எரிந்து அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.
புகை அதிகமாக இருந்ததால் ரோட்டில் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை
ஏற்பட்டது. தீப்பிடித்து எரியும் குப்பையில் இருந்து தீப்பொறி பரவி
எரியும், வெடிக்கும் வாய்ப்புள்ள பொருட்கள் மீது பட்டால் பெரும் தீ விபத்து
ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கன்டெய்னர் குப்பைகள் பாதுகாப்பற்ற முறையில்
எரிக்கப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


