/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வுஅடுக்கு மாடி குடியிருப்புகள் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
ADDED : ஜூலை 27, 2011 11:44 PM
புதுச்சேரி : சுதந்திரப் பொன்விழா நகரில், வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்புகளை, அமைச்சர் பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார்.புதுச்சேரி வீட்டு வசதி வாரியம் சார்பில், சுதந்திரப் பொன் விழா நகரில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது.
இதில், குறைந்த வருவாய் பிரிவினருக்காக கட்டப்பட்டுள்ள 64 வீடுகளில் 57 வீடுகள் பலதரப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 வீடுகள் ஒதுக்கீடுக்கு தயார் நிலையில் உள்ளன.உயர் வருவாய் பிரிவினருக்காக கட்டப்பட்டு வரும் 40 வீடுகளில் 31 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 9 வீடுகள் ஒதுக்கீட்டுக்கு தயார் நிலையில் உள்ளன.இக்குடியிருப்பு கட்டுமானப் பணியை அமைச்சர் பன்னீர் செல்வம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் அசோக ராமசேகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.