/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாராளுமன்றம் எதிரில் போராட்டம்ஜிப்மர் ஊழியர் சங்கம் பங்கேற்புபாராளுமன்றம் எதிரில் போராட்டம்ஜிப்மர் ஊழியர் சங்கம் பங்கேற்பு
பாராளுமன்றம் எதிரில் போராட்டம்ஜிப்மர் ஊழியர் சங்கம் பங்கேற்பு
பாராளுமன்றம் எதிரில் போராட்டம்ஜிப்மர் ஊழியர் சங்கம் பங்கேற்பு
பாராளுமன்றம் எதிரில் போராட்டம்ஜிப்மர் ஊழியர் சங்கம் பங்கேற்பு
ADDED : செப் 15, 2011 04:10 AM
புதுச்சேரி:புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பாராளுமன்றம்
எதிரில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க ஜிப்மர் ஊழியர் சங்கத்தினர்
டில்லி சென்றுள்ளனர்.
மத்திய சுகாதார சம்மேளனம் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட
வேண்டும். தினக்கூலி ஊழியர்களை கொண்டு பணி அமர்த்துவதை கண்டித்தும்,
பேஷண்ட் கேர் அலவன்சை இரட்டிப்பாக வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி பாராளுமன்றம் எதிரில் இன்று (15ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டமும்,
16ம் தேதி அனைத்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சார்பில் பேரணியும்
நடக்கிறது.இதில் கலந்து கொள்ள ஜிப்மர் மருத்துவமனை ஊழியர் சங்க செயல்
தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் 20 பேர் டில்லி
புறப்பட்டு சென்றனர்.இத்தகவலை சங்கத் தலைவர் ஆரோக்கியம் கலைமதி, பொதுச்
செயலாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளனர்.


