/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/முன்மாதிரி பேரூராட்சியாக மாற்றுவேன் : சேத்தூர் பேரூராட்சி இந்திய கம்யூ., வேட்பாளர்முன்மாதிரி பேரூராட்சியாக மாற்றுவேன் : சேத்தூர் பேரூராட்சி இந்திய கம்யூ., வேட்பாளர்
முன்மாதிரி பேரூராட்சியாக மாற்றுவேன் : சேத்தூர் பேரூராட்சி இந்திய கம்யூ., வேட்பாளர்
முன்மாதிரி பேரூராட்சியாக மாற்றுவேன் : சேத்தூர் பேரூராட்சி இந்திய கம்யூ., வேட்பாளர்
முன்மாதிரி பேரூராட்சியாக மாற்றுவேன் : சேத்தூர் பேரூராட்சி இந்திய கம்யூ., வேட்பாளர்
ADDED : செப் 30, 2011 01:29 AM
சேத்தூர் : '' சேத்தூர் பேரூராட்சியை முன்மாதிரி பேரூராட்சியாக மாற்றுவேன்,'' என , இந்திய கம்யூ., வேட்பாளர் ஆர்.முருகேஸ்வரி கூறினார்.
சேத்தூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான இந்திய கம்யூ., வேட்பாளர் முருகேஸ்வரி, நேற்று கட்சி அலுவலகத்திலிருந்து லிங்கம் எம்.பி., தலைமையில், தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று ,தேர்தல் அதிகாரி நாகராஜனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது: என்னை தலைவராக தேர்ந்தெடுத்தால் ,சேத்தூர் பேரூராட்சியை முன்மாதிரி பேரூராட்சியாக மாற்றுவேன்.குடிநீர் பிரச்னையை போக்குவேன்.அனைத்து வார்டுகளிலும் உள்ள பழுதடைந்துள்ள அடிபம்புகள் சரிசெய்யப்படும்.
அனைத்து வார்டுகளிலும் பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டித்தருவேன்.மக்கள் அடிப்படை பிரச்னைகளை உடனக்குடன் சரிசெய்து தருவேன்.அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். மக்கள் சொல்லும் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன்.பேரூராட்சி பகுதிகளை எப்போதும் சுகாதாரமாக வைப்பேன். மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு உதவிகளும் இங்குள்ளவர்களுக்கு கிடைக்க பாடுபடுவேன், என்றார்.