ADDED : ஆக 21, 2011 02:00 AM
தேனி : உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த, ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் உதவியாளர்களையே இது வரை நியமித்து வந்தனர்.
இத்துறையில் 2,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஊராட்சிகளில் தேர்தல் பணிக்கான உதவியாளர்களை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு தேர்தல் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலமே, வார்டு மெம்பராக போட்டியிடுவோரின், விண்ணப்பங்களை பெறுவது, பரிசீலனை செய்து, இறுதி பட்டியலை சின்னத்துடன் வெளியிடுவது ஆகிய பணிகள் மேற்கொள்ள வேண்டும். உதவியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், அப்பணிக்கு பிற துறைகளில் உள்ளவர்களை பயன்படுத்தும் கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான ஊழியர் பட்டியலை தயாரிக்க கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.