போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பேன்: மேதா பட்கர்
போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பேன்: மேதா பட்கர்
போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பேன்: மேதா பட்கர்
UPDATED : செப் 19, 2011 04:21 PM
ADDED : செப் 19, 2011 04:08 PM
நெல்லை: கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக 9-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டம் நடந்து வருகிறது.
இப்போராட்டக்குழுவினரை பிரபல சமூக சேவகர் மேதாபட்கர் இன்று சந்தித்து பேசினார். தொடர் போராட்டத்தினால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் பேசுகையில், ஏற்கனவே இங்கு வந்துள்ளேன். இது இரண்டாவது முறை எனவும், உங்களின் போராட்டத்திற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என கூறினார். இதற்கிடையே உண்ணாவிரதத்தினை கைவிடுமாறு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார். இதையடுத்து போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனினும் போராட்டம் தொடரும் என கூறப்படுகிறது.
.