/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டியில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்கோவில்பட்டியில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
கோவில்பட்டியில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
கோவில்பட்டியில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
கோவில்பட்டியில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
கோவில்பட்டி : குறைகளையே சுட்டிகாட்டி போராட்டம் நடத்தும் இரு கம்யூ.,கட்சிகளுமே அதிமுக.,ஆட்சியின் பட்ஜெட் டை மனம் திறந்து பாராட்டுகின்றனர் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் கோவில்பட்டியில் நடந்த அதிமுக.,பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் பேசினார்.
பின்னர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் பேசுகையில், தமிழக முதல்வர் சட்டசபையில் ஒரு லட்சம், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்த அதிமுக.,ஆட்சி பட்ஜெட் எவ்வித குறைகளும் இல்லாத நிறைவான பட்ஜெட். கம்யூ., கட்சிகள் எந்த கூட்டணியில் இருந்தாலும் பட்ஜெட்டை குறை கூறி போராட்டம் நடத்துவர். ஆனால் ஜெ.,பட்ஜெட்டை பார்த்து இரு கம்யூ., கட்சிகளும் மனம் திறந்து பாராட்டியுள்ளனர். பொது மக்களும் பாராட்டுகின்றனர். கம்யூ.,கட்சிகளையும், பொதுமக்களையும் நிறைவுபடுத்திய பட்ஜெட் அதிமுக.,ஆட்சி பட்ஜெட்தான். கடந்த திமுக.,ஆட்சியினர் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துவிட்டு சென்றனர். ஆனால் ஜெ.,ஆட்சிக்கு வந்து கடந்த இரண்டரை மாத காலத்தில் கடனையும் சரி செய்து ரூபாய் ஒரு லட்சம் கோடி பட்ஜெட்டும் தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் போது முதல்வராக இருந்த கருணாநிதி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். ஆனால் ஜெ.,சட்டசபையில் இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டுமெனவும், போர் குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்து விசாரணை செய்ய வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றினார். இதிலிருந்து அதிமுக.,விற்கு இலங்கை தமிழர்கள் மீது உணர்வு உண்டு என்றும், திமுக.,வினருக்கு உணர்வு இல்லை என்பதும் தெரிய வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிளாரி கிளிண்டன் தமிழகத்திற்க வந்து தமிழக முதல்வரை சந்தித்து, சட்டசபை தீர்மானம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அமெரிக்க பாராளுமன்றத்தில் தமிழக சட்டசபை தீர்மானம் சரி என்று கருத்து பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் தமிழகமும், தமிழ் இன மக்களும் தலைநிமிர்ந்து நிற்கின்றனர். தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை வழங்கி அதிமுக.,வை ஆட்சியில் அமர வைத்தது போல் உள்ளாட்சி தேர்தலிலும் அமோக ஆதரவு வழங்குமாறும் கோரி இந்து அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் பேசினார். பின்னர் தலைமை கழக பேச்சாளர் சுப்பையா, கபாலி ஆகியோர் பேசினர். முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜனார்த்தனம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன் ஆகியோர் பேசினர். ஒன்றிய மாணவர் அணி செயலாளர் செண்பகராமன் மற்றும் 32வது வார்டு செயலாளர் ஜெமினி ஆகியோர் நன்றி கூறினர். ஏற்பாடுகளை கோவில்பட்டி சட்டசபை தொகுதி அதிமுக.,வினர் செய்திருந்தனர்.