/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/செப்.,ல் ப்ளஸ் 2 உடனடி சிறப்புத்தேர்வுசெப்.,ல் ப்ளஸ் 2 உடனடி சிறப்புத்தேர்வு
செப்.,ல் ப்ளஸ் 2 உடனடி சிறப்புத்தேர்வு
செப்.,ல் ப்ளஸ் 2 உடனடி சிறப்புத்தேர்வு
செப்.,ல் ப்ளஸ் 2 உடனடி சிறப்புத்தேர்வு
ADDED : ஆக 15, 2011 02:17 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ப்ளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான உடனடி சிறப்புத்தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் துவங்குகிறது.
தேர்வு அட்டவணை வருமாறு: செப்டம்பர் 21 - தமிழ் முதல் தாள், 22 - தமிழ் இரண்டாம் தாள், 23 - ஆங்கிலம் முதல் தாள், 24 - ஆங்கிலம் இரண்டாம் தாள், 26 - இயற்பியல் மற்றும் வணிகவியல், 27 - வேதியியல் மற்றும் பொருளியல், 28 - உயிர் வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், அரசியல் அறிவியல், 29 - உயிரியல், வரலாறு, தாவரவியல், 30 - கணிதம், கணக்குபதிவியல், விலங்கியல். அக்டோபர் 1 - வணிக கணிதம், இந்திய கலாச்சாரம், நர்சிங், குழந்தை வளர்ப்பு; பராமரிப்பும் ஆகிய பாடத்துக்கான தேர்வுகள் காலை 10 முதல் மதியம் 1.15 வரை நடக்கிறது. செப்டம்பர் 26 - உளவியல், சுருக்கெழுத்து, 27 - தொழிற்கல்வி பாடம், 28 - கம்யூனிகேடிவ் இங்கிலீஸ், ஹோம் சயின்ஸ், புள்ளியல், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம், 29 - நுண்ணுயிரியல், சிறப்பு தமிழ், 30 - ஃபவுண்டேஷன் அறிவியல், புவியியல் தேர்வுகள் மதியம் 2 முதல் 5.15 மணி வரை நடக்கிறது.