ADDED : செப் 28, 2011 12:59 AM
மதுரை : சென்னை - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு நெல்லை
நோக்கி வந்து கொண்டிருந்தது.
மணப்பாறை அருகே வையம்பட்டி வந்தபோது ரயிலில்
இன்ஜின் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. அதை சரி செய்த பின் இரண்டு மணி
நேரம் தாமதமாக மதுரைக்கு நேற்று காலை 7.35 மணிக்கு வந்தது. காலை 6.30
மணிக்கு வர வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் காலை 8.30 மணிக்கு மதுரை வந்தது.