/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கந்தசாமி நாயுடு கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம்கந்தசாமி நாயுடு கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம்
கந்தசாமி நாயுடு கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம்
கந்தசாமி நாயுடு கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம்
கந்தசாமி நாயுடு கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 16, 2011 12:08 AM
கடலூர்:மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., மாணவிகளுக்கு கண்தான விழிப்புணர்வு முகாம் நடந்தது.கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் தலைமைத் தாங்கினார்.
என்.எஸ். எஸ்., அலுவலர் கல்பலதா முன்னிலை வகித்தார். கோமதி வரவேற்றார்.பார்வை இழப்பு தடுப்பு சங்க மாவட்ட திட்ட மேலாளர் கேசவன் பேசினார். ஒருங்கிணைப்பாளர் ஞானஸ்கந்தன், பேராசிரியர் தமிழ்பொன்னி, சென்ட்ரல் ரோட்டரி சங்கச் செயலர் சண்முகம், கண்தான ஆலோசகர் புவனேஸ்வரி, ரோட்ராக்ட் சங்க உறுப்பினர்கள் அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் கண் தான விழிப்புணர்வு கலந்துரையாடல் மற்றும் வினாடி - வினா நடந்தது.


