/உள்ளூர் செய்திகள்/கரூர்/காப்பீட்டு திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை அனுமதி : போக்குவரத்துத்துறை அமைச்சர் பெருமிதம் பேச்சுகாப்பீட்டு திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை அனுமதி : போக்குவரத்துத்துறை அமைச்சர் பெருமிதம் பேச்சு
காப்பீட்டு திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை அனுமதி : போக்குவரத்துத்துறை அமைச்சர் பெருமிதம் பேச்சு
காப்பீட்டு திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை அனுமதி : போக்குவரத்துத்துறை அமைச்சர் பெருமிதம் பேச்சு
காப்பீட்டு திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை அனுமதி : போக்குவரத்துத்துறை அமைச்சர் பெருமிதம் பேச்சு
கரூர்: 'முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் நான்கு லட்சம் வரை அறுவை சிகிச்சை செய்து கொள் ள அனுமதியும், தொடர்ந்து இலவச சிகிச்சை பெறவும் காப்பீடு திட்டம் மாற்றப்பட்டுள்ளது' என போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அரசு விழாவில் பேசினார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்களுக்கா ன காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்து நான் கு லட்சம் வரை அறு வை சிகிச் சை செய்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளார். மே லும், காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் தொடர்ந்து இலவச சிகி ச்சை பெறவும் உத்தரவிட்டுள்ளார். இன்று (நேற்று) துவங்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில், மக்கள் அனைத்து விதமான நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்து கொள்ளவும், தேø வயான மருந்துகள் பெற்றுக்கொள்ளவும் தொடர் சிகிச்சை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், இலவச சைக்கிள் போன்ற பல சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். இந்த வாய்ப்பை இப்பகுதி மக்களுக்கும், மாவட்ட மக்களும் பயன்படுத்திக் கொண்டு நோயற் ற வாழ்வு வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கரூர் எம்.பி., தம்பிதுரை பேசுகையில், ''எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் மருத்துவ மு காம் நடத்துவது போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் மருத்துவ முகாம்கள் அதிகளவு நடத்த வேண்டும். இதன்மூலம் கரூர் மாவட்டம் சுகாதாரத்தில் முதலிடம் பெற வேண்டும்,'' என்றார்.
கலெக்டர் ÷ஷாபனா பேசியதாவது: ஏழை மக்கள் இலவச மருத்துவ உதவி பெறுவதற்காக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. அனைத்து தரப்பு மக்களும் வருகை தந்து உடல் பரிசோதனை செய்து கொள்ள வே ண்டியது மிகவும் அவசியமாகும். ஆகவே, மருத்துவ முகாம்களில் அனைத்து வியாதிகளுக்கும் நவீன உபகரணங்கள் மூல ம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றது. மேலும், தரமான மருந்துகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார். எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணராயபுரம் காமராஜ், குளித்தலை பாப்பாசுந்தரம், தாந்தோணி நகராட்சி தலைவர் ரேவதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.


