/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாகூர் பாரதி அரசு பள்ளியில் இளைஞர் எழுச்சி கருத்தரங்குபாகூர் பாரதி அரசு பள்ளியில் இளைஞர் எழுச்சி கருத்தரங்கு
பாகூர் பாரதி அரசு பள்ளியில் இளைஞர் எழுச்சி கருத்தரங்கு
பாகூர் பாரதி அரசு பள்ளியில் இளைஞர் எழுச்சி கருத்தரங்கு
பாகூர் பாரதி அரசு பள்ளியில் இளைஞர் எழுச்சி கருத்தரங்கு
ADDED : ஆக 29, 2011 10:55 PM
பாகூர் : பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் எழுச்சி கருத்தரங்கம் நடந்தது.
பட்டதாரி ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முதல்வர் கோமதி தலைமை தாங்கினார். இயற்பியல் விரிவுரையாளர் பாலசுப்ரமணியன், தலைமையாசிரியர் சுப்ரமணியன், தமிழாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தனர். சீனியர் எஸ்.பி., சந்திரன் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில் 'லட்சியம் இல்லாத மனிதன் உயர்ந்த நிலைக்கு செல்வதில்லை, போட்டிகள் நிறைந்த உலகில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி காணமுடியும். மாணவப் பருவத்திலேயே எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்ற கனவு தீப்பிழம்பாக வேண்டும். பள்ளி மாணவர்கள் பாடப்புத்தகத்தோடு நின்றுவிடாமல் பிற புத்தகங்களையும் ஆழ்ந்து படிக்க வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில் எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி, தேசிய விருதாளர் ஆதவன், நல்லாசிரியர் வேணுகோபால், தமிழ் விரிவுரையாளர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியை வசந்தி நன்றி கூறினார்.