ADDED : ஜூலை 19, 2011 08:45 PM
சென்னை: 'சிந்தனை செய்' பட விவகாரம் தொடர்பாக, சன், 'பிக்சர்ஸ்' நிர்வாக அதிகாரி சக்சேனா மீது, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சக்சேனா உட்பட இருவரை கைது செய்துள்ளனர்.சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிஜிட்டல் மேஜிக் விஷன் உரிமையாளர் அருள் மூர்த்தி.
இவர், அம்மா ராஜசேகர் என்பவர் தயாரித்த, 'சிந்தனை செய்' படத்தை, சன், 'பிக்சர்ஸ்' நிறுவனம் வாங்கியதாகவும், இப்படத்திற்கு கிராபிக்ஸ் தயாரித்த வகையில், தனக்கு, 22 லட்சம் பேசி, 17 லட்சம் கொடுத்ததாகவும், மீதமுள்ள பணத்தை கேட்டபோது, சன்,'பிக்சர்ஸ்' சக்சேனா மற்றும் அம்மா ராஜசேகர் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார், சக்சேனா மற்றும் அம்மா ராஜசேகர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.


