/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கிருமாம்பாக்கம் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்கிருமாம்பாக்கம் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்
கிருமாம்பாக்கம் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்
கிருமாம்பாக்கம் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்
கிருமாம்பாக்கம் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்
ADDED : செப் 01, 2011 01:32 AM
கிருமாம்பாக்கம் : கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கண்பரிசோதனை முகாம் நடந்தது.
கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை மற்றும் தேசியகண்பார்வை இழப்புத் திட்டம் சார்பில் கண்பரிசோதனை முகாம்நடந்தது. பள்ளி விரிவுரையாளர் அய்யனார் வரவேற்றார். துணை முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். புதுச்சேரி அரசு மருத்துவமனை டாக்டர்கள் செந்தமிழன், அமுதா, கண் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினர். டாக்டர்கள் பூவராகவமூர்த்தி, ஆதிமூலம், கோகுலகுமார் ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். முகாமில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளி தேசிய பசுமைப்படை பொறுப்பாளர் நவபாலன், புதுச்சேரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செய்திருந்தனர். துணை முதல்வர் காளிதாஸ் நன்றி கூறினார்.